சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 8 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
5 மூத்த வழக்கறிஞர்கள், நீதித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் 3 பேர் என மொத்தம் 8 பேருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்வது என கடந்த 17ந்தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன், லெஷ்மண சந்திர விக்டோரியா கவுரி, பிள்ளைப்பாக்கம் பாகுகுடும்பி பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 மூத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
நீதித்துறை மூத்த அதிகாரிகளான பெரியசாமி வடமலை, ராமசந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோருக்கும் நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.







