தொடரும் வரதட்சணை கொடுமை : கர்ப்பிணியை கொலை செய்து எரித்த குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டதுடன், அவரது உடலை தீவைத்து கொளுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது. வளர்ச்சிகள் பல கண்ட பிறகும் இந்தியாவில் வரதட்சணை கொடுமை என்பது தொடர்ந்து நடந்து…

மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டதுடன், அவரது உடலை தீவைத்து கொளுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது.

வளர்ச்சிகள் பல கண்ட பிறகும் இந்தியாவில் வரதட்சணை கொடுமை என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. வரதட்சணை வாங்குவதும், வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் இந்த நிலை மாற்றம் இல்லாமல் தொடர்ந்து நடந்து தான் வருகிறது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டதுடன், அவரது உடலை குடும்பத்தினரே தீவைத்து கொளுத்திய அதிர்ச்சி சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் ராஜ்கர் மாவட்டம் தண்டி குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரீனா தன்வார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் மிதுன் மற்றும் அவரது தாயார் ரீனா தன்வாரிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கிடையே, அவர்களுக்கிடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரமடைந்த மிதுன் மற்றும் அவரது தாயார், ரீனாவின் கை கால்களை வெட்டி கொலை செய்துள்ளனர்.மேலும், அவரது உடலுக்கு தீ வைத்துள்ளனர். இதனையறிந்த பொதுமக்கள் ரீனாவின் தந்தை ராம்பிரசாத் தன்வாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!

பின்னர், ரீனாவின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ரீனாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து பாதி எரிந்த உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.