ஐசிசி மகளிர் டி20 போட்டி : வீராங்கனைகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு!

மகளிர் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பௌலிங் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐசிசி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் பேட்டிங்கில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா…

மகளிர் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பௌலிங் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐசிசி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் பேட்டிங்கில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ஷஃபாலி வர்மா பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஹர்மன்பிரீத் கௌர் ஒரு இடமும், ஷஃபாலி வர்மா 4 இடங்களும் முன்னேறி இருவரும் 11-வது இடத்தில் உள்ளனர். பேட்டிங் தரவரிசையில் முதல் 20 இடங்களில் 4 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 4-வது வீராங்கனையாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ளார். ரிச்சா கோஷ் 24-வது இடத்தில் உள்ளார். 769 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதலிடத்தில் தொடர்கிறார்.

இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – தொடரும் கைதுகள்… சிக்குவாரா ‘சம்போ’ செந்தில்?

பந்துவீச்சை பொறுத்தவரையில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3-வது இடத்தில் தொடர்கிறார். ரேனுகா சிங் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இடது கை சுழற்பந்துவீச்சாளரான ராதா யாதவ் 20-வது இடத்தில் உள்ளார். ஸ்ரேயங்கா பாட்டீல் 19 இடங்கள் முன்னேறி 41-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோன் 772 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.