மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.3,419 கோடி மின்சாரக் கட்டணம் வந்ததால் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ரூ.3,419 கோடி மின்கட்டணத்தைப் பெற்றதால் அதிர்ச்சியடைந்தார். இதனால், அவரின் மாமனார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், மனிதத் தவறால் இது நடந்துவிட்டதாகக் கூறிய மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் நடத்தப்படும் மின்சார நிறுவனம், புதிய மின்கட்டணமாக ரூ.1,300க்கு பில் வழங்கி, குப்தா குடும்பத்திற்கு நிவாரணம் அளித்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘தெலங்கானாவில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம்’
எம்.பி.எம்.கே.வி.வி.சி பொது மேலாளர் நிதின் மங்லிக், கூறுகையில், மிகப்பெரிய மின் கட்டணத்திற்கு மனித தவறுதான் காரணம் எனவும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மென்பொருளில் நுகரப்படும் யூனிட்டுகளுக்குப் பதிலாக ஒரு ஊழியர் நுகர்வோர் எண்ணை உள்ளிட்டதால், அதிகத் தொகையுடன் பில் வந்ததாக அவர் விளக்கமளித்தார். இந்த விவகாரம் சம்பவம் தொடர்பாக, மத்தியப் பிரதேச எரிசக்தித் துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தவறு சரிசெய்யப்பட்டுச் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.








