தெலங்கானாவில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம்

தெலங்கானாவில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆக்டிவ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆக்டிவ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பில், மாறிவரும் வருவாய்…

தெலங்கானாவில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆக்டிவ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆக்டிவ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பில், மாறிவரும் வருவாய் சூழ்நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுடன் தொற்றுநோய்க்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும், அதனால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிப்பது முக்கியம் எனத் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘‘ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தத் தைரியம் உள்ளதா?’ – அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

மேலும், ஆரோக்கியமான சூழலில் திரைப்படங்களை வெளியிடுவதை உறுதி செய்வது, நம்முடைய பொறுப்பு எனத் தெரிவித்துள்ள ஆக்டிவ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து உறுப்பினர்களும் தானாக முன்வந்து படப்பிடிப்புகளை ஆகஸ்ட் 1-ஆம் முதல் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.