அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 269-ஆவது குருபூஜையை முன்னிட்டு, வருகின்ற 11.7.2026 சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




