நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கியது யுஏஇ

நடிகர் விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பித்தது. ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய நபர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த கோல்டன் விசா 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.…

நடிகர் விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பித்தது.

ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய நபர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த கோல்டன் விசா 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விக்ரமுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி உள்ளது.

துபாய் சென்ற நடிகர் விக்ரமுக்கு மேள தாளம் முழங்க ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இதுபோலவே நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.கோல்டன் விசா என்றால் என்ன?

➤ பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது ஐக்கிய அரபு அமீரகம்(UAE)

➤  நீண்ட கால குடியுரிமையை வழங்கும் நோக்கில், 2019ம் ஆண்டில் இதனை அமல்படுத்தியது UAE

➤ விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், அந்நாட்டின் குடிமக்கள் போலவே அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம்

➤  UAE-ன் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100% உரிமையை அனுபவிக்க முடியும்

➤ விசாக்கள் 5 (அ) 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.