முக்கியச் செய்திகள் உலகம்

மும்பை டூ டிவிட்டர் CEO; யார் இந்த பராக் அகர்வால்?

டிவிட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியின் பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள அரசியல் மற்றும் சமூக ஆர்வளர்களின் களமாக டிவிட்டர் இருந்து வருகிறது. தனது நிறுவனத்தின் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் டிவிட்டர் காட்டும் தீவிரம் அதை பல சர்ச்சைகளுக்குள் சிக்க வைத்துள்ளது.

இந்தியாவில் புதிய தொழில் நுட்ப விதிகள் அமல்படுத்தப்பட்டபோது டிவிட்டருக்கும் இந்திய அரசுக்கும் பெரும் உரசல்கள் ஏற்பட்டன. புதிய தொழில்நுட்ப விதியின்படி சமூக ஊடகங்களிலும் ஆன்லைனிலும் பதிவாகும் சரிபார்க்கப்படாத தகவல்களை சரிபார்ப்பது, ஒழுங்குபடுத்துவது அல்லது நீக்குவது சம்பந்தப்பட்ட பொறுப்பு அந்தந்த தளங்களையே சாரும் என்று அரசு கூறியிருந்தது. இந்த விதிகளுக்கு உடன்படுவதில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அது தொடர்பாக நீதிமன்றத்தின் தலையீட்டை டிவிட்டர் நாடியது.

இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்க அரசியலிலும் டிவிட்டர் தனது பிடியை தளர்த்தவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். சில வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. இதனால், அவரது கணக்கை நிரந்தரமாக நீக்கியது டிவிட்டர்.

இவ்வாறாக வெளி புறத்தில் அரசியல் சர்ச்சைகள் நடந்தாலும், உள்ளுக்குள் சில சலசலப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று (நவ.29) டிவிட்டரின் சிஇஓ ஜாக் டோர்சி தனது ராஜினாமாவை அறிவித்தார். இதனையடுத்து புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் கூகுளைத் தொடர்ந்து, மற்றொரு பெரு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு உயர்ந்துள்ள மற்றொரு இந்திய வம்சாவளியாக பராக் அகர்வால் உள்ளார்.

  • 45 வயதான இவர், மும்பை ஐஐடியில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். இதனையடுத்து கலிஃபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் தனது பிஎச்டியை முடித்தார்.
  • கடந்த 2011ல் இவர் டிவிட்டரில் தனது பணியை தொடங்கினார். விரைவிலேயே சிறந்த மென்பொருள் பொறியாளர் பட்டதையும் பெற்றார்.

  • 2018ல் டிவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்ற அகர்வால், டிவிட்டரில் தனது பணியை தொடங்குவதற்கு முன்னர் AT&T, மைக்ரோசாஃப்ட் மற்றும் யாகூவில் தனது பயிற்சியை முடித்துள்ளார்.
  • டிவிட்டர் சிஇஓவாக பொறுப்பேற்ற பின்னர் பராக் அகர்வால் சிலிக்கான் வேலி எனப்படும் இந்திய வம்சாவளிகளின் ‘தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் உலகளாவிய மையத்தில்’ இணைந்துள்ளார். இக்குழுவில் சுந்தர் பிச்சை மற்றும் சத்யா நாதெல்லா உள்ளிட்ட புகழ் பெற்ற இந்திய வம்சாவளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement:
SHARE

Related posts

கோவையில் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்

Arivazhagan CM

2வது நாளாக 33 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு!

Vandhana

யூடியூபர் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Halley Karthik