வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி : அக்.26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்?

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்.26-ஆம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைட்யம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்.15-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிற்து. சென்னை கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற அக்.26 ஆம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, “தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்கக் கடலில் நேற்று நிலவிய வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால், இன்று (23 அக்டோபர் 2026) காலை 05:30 மணி (இந்தியத் திட்ட நேரம்) அளவில், கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது அதே பகுதியில் நீடித்து, அக்டோபர் 24, 2026 அன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 25 அன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 26 காலை வாக்கில் மேற்கு-மத்திய வங்கக் கடலில் சூறாவளி புயலாகவும் (Cyclonic Storm) வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது மேலும் வலுவடைந்து, அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் செல்லக்கூடும்” இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்.26-ஆம் தேதி புயலாக உருவாகும் பட்சத்தில் அப்புயலுக்கு அர்னாப் (ARNAB) என பெயர் சூட்டப்பட்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.