தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும், சவரனுக்கு ரூ.1240 குறைந்து ரூ.1,05,880-க்கு விற்பனையானது. தொடர்ந்து 4வது நாளாக இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.175 குறைந்து ஒரு கிராம் ரூ.13,060-க்கும், சவரனுக்கு ரூ.1400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,480-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4080 குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே வர்த்தகமாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




