ஒரே சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட காதலர்கள்

காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் அதே சேலையில் காதலனும் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்பிள்ளை – அமுதா தம்பதியினர்.…

காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் அதே சேலையில் காதலனும் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்பிள்ளை – அமுதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். செல்லம்பிள்ளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அமுதா தனது 2 மகள்களுடன் நாகர்கோவில் சிதம்பரம் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

அமுதா நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிலும், மகள்கள் இருவரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தனர். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற அமுதாவின் இரண்டாவது மகளான உமாகவுரி தனது சகோதரியிடம் முன் கூட்டியே வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்துக்கு பிறகு உமாகவுரியின் சகோதரி வீட்டிற்கு வந்தபோது உமாகவுரியும் அதே பகுதியைச் சேர்ந்த வேணுமோகன் (20) என்பவரும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் சகோதரி அவர் தாயாருக்கும் கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உமா கவுரியும், வேணு மோகனும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு ஒருந்துள்ளது. இதனால் உமாகவுரி குடும்பத்தினர் நாகர்கோவிலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். நாகர்கோவிலுக்கு வந்த பிறகும் வேணுமோகன் உமாகவுரியுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் வேணுமோகன், உமாகவுரியிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து வேணு மோகன் நாகர்கோவிலில் உள்ள உமாகவுரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் வேணுமோகன் உமா கவுரியை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த உமாகவுரி வீட்டில் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக்
கொண்டார். இதனைப் பார்த்த வேணுகோபாலும் காதலி தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட அதே சேலையில் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டார் .இதனையடுத்து போலீசார் வேணுமோகன், உமாகவுரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.