“கோப்ரா” பட ப்ரமோசனில் மாணவர்களுடன் உரையாடி,அறிவுரை வழங்கிய -விக்ரம்

திருச்சியில் “கோப்ரா” பட ப்ரமோசனில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் மாணவர்களிடையே உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். திருச்சி தூய வளனார் எஸ்டி ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற “கோப்ரா” பட ப்ரமோசனில் கலந்து கொண்ட…

திருச்சியில் “கோப்ரா” பட ப்ரமோசனில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் மாணவர்களிடையே உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

திருச்சி தூய வளனார் எஸ்டி ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற “கோப்ரா” பட ப்ரமோசனில் கலந்து கொண்ட அப்படத்தின் கதாநாயகன் விக்ரம் மாணவர்களிடையே உரையாடினார். அதில் திருச்சி என்றாலே எனக்கு சாமி படம் தான் ஞாபகத்திற்கு வரும். பள்ளி பருவத்தில் திருச்சியில் விளையாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். பின்பு படத்தைப் பற்றி பேசிய விக்ரம் கோப்ரா திரைப்படம் ஒரு Science Fiction, Emotion கலந்த படம். இருமுகன் படத்தை தாண்டி “அதுக்கும் மேல” இருக்கும். இது புதவிதமான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் திரைக்கு வர இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகி ஸ்ரீநிதி செட்டி கல்லூரி மாணவியாக, ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார்.

என் அப்பா என்னை IAS படிக்க சொன்னார், ஆனால் நான் கல்லூரிக்கே செல்லவில்லை.எனது நாட்டம் முழுவதும் திரைத்துறையில் தான் இருந்ததது சினிமா என்றால் எனக்கு பைத்தியம். தற்போது கூட கேவலமாக தாடியுடன் இருப்பேன். அது குறித்த கவலை எனக்கு இல்லை எனது எண்ணம் முழுவதும் சினிமாதான். என்னுடைய அடுத்த படத்திற்காக தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறேன். எனது ரசிகர்கள் சிலர் பச்சைக் குத்தி கொள்கிறார்கள். ஆனால் நான் அவர்களை சந்திக்க கூட முடியாது. ஆயினும் என் மீது பாசத்துடன் உள்ளனர். இதெல்லாம் எனக்கு கடவுள் கொடுத்த வரம்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் உரையாடிய சீயான் விக்ரம்,
நீங்கள் எவ்வளவோ சிரமங்களை கடந்து வந்துள்ளீர்கள் ஆனால், இப்போதுள்ள மாணவர்கள் சின்ன விஷயத்துக்கெல்லாம் உயிரை மாய்த்துக்
கொள்கிறார்களே? என்ற மாணவரின் கேள்விக்கு பதில் அளித்த விக்ரம்,

தற்போதைய தலைமுறை அப்படி ஆகிவிட்டது, உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதை உறுதியாக செய்ய வேண்டும். ஒரு முறை விபத்துக்குள்ளான நான் நடக்கவே முடியாது என மருத்துவர்கள் கூறிய நிலையில் வைராக்கியத்துடன் நடந்து நடிக்க ஆரம்பித்தேன் என சினிமா மீதான தனது காதலையும் தனது மன உறுதியையும் வெளிப்படுத்தினார்.

பொன்னியின் செல்வன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விக்ரம்,
பொன்னின் செல்வன் கதை சூப்பராக இருக்கும். அந்த கதையை தாண்டி இதுவரை ஒரு வலிமையான நாவல் வந்தது இல்லை‌. அந்த படத்தில் நான் நடித்ததிருப்பது பெருமையாக உள்ளதாக கூறி மகிழ்ந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.