அன்பு அச்சமில்லாதது…அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார்… ட்ரெண்டாகும் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரது பொன்மொழிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.  தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர்பந்தரில் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ம்…

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரது பொன்மொழிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. 

தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர்பந்தரில் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு அவரது 155வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும், வாழ்க்கைக்கான அவரது தத்துவங்களுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த, பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

Image

 

அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் காலந்தோறும் பின்பற்ற வேண்டிய மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.

  • எல்லாவற்றுக்கும் அடிப்படை அறம் தான். அந்த அறத்திற்கே அடிப்படை உண்மை தான்.
  • அன்பு அச்சமில்லாதது. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார்.
  • கூட்டத்தில் நிற்பது எளிதானது ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.Image
  • நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமில்லை; நீ ‘செய்கிறாய்’ என்பது தான் முக்கியம்.
  • பலவீனமானவன் பிறரை மன்னிக்க மாட்டான்.
  • மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம்.
  • பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அது போல முதலில் நீ மாறு.

Image

  • நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள்.
  • பணிவு இல்லாத வாய்மை செருக்கு மிகுந்த கேலிச் சித்திரம் ஆகும்.
  • உங்கள் செயல்களினால் வரும் விளைவுகள் என்னவென்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், எந்த விளைவும் இருக்காது.

image

  • அகிம்சை என்பது இதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் எந்த தொடர்பும் கிடையாது.
  • தன்னலமில்லாத செயல்களே ஒழுக்கமாகும்.
  • மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள். மனிதநேயம் என்பது ஒரு கடல், கடலின் சில துளிகள் அழுக்காக இருப்பதால், கடல் அழுக்காகாது.

image

  • இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள் பார்த்துக் கொள்வார்.
  • மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறொரு ஆயுதமும் இல்லை.
  • ஒருவன், தாம் மேற்கொள்ளும் செயலின் முடிவை அறிந்துகொள்வதில் கவலையாக இருந்தால், அவனுக்குத் தடைகளும் எதிர்ப்புகளும்தான் அதிகம் தென்படும்.

image

  • விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள். தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
  • மதம் என்பதன் உட்பொருள் சத்தியமும் அகிம்சையும்தான்.
  • சிக்கனம்தான் பெரிய வருமானமாகும்.
  • மயக்கம் வரும்போது அறிவு பயன்படாது. அந்த இடத்தில் நம்பிக்கை தான் கைகொடுக்கும்.

image

  • ஒருவனிடம் துக்கமும், தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.
  • வாய்மையைத் தவிர வேறு எந்த ராஜதந்திரமும் எனக்குத் தெரியாது.
  • மனதில் தீயவற்றைச் சிந்திப்பவன், தீயச் செயல்களைச் செய்பவன் போன்றவனே. சிந்திப்பவனைவிடச் செய்பவன் மோசமானவன் அல்ல.

image

  • கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல; தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான குருடன்.
  • மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே.
  • எல்லா கலைகளையும் விட வாழ்வு தான் பெரிது.

image

  • இந்த உலகத்துக்கு அமைதியைப் போதிக்க விரும்பினாலும், உண்மையான போருக்கு எதிரான போரைத் தொடங்கவேண்டுமென்றாலும், அதைக் குழந்தைகளிடமிருந்துதான் தொடங்கவேண்டும்.
  • எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.
  • பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாக இருக்க மறந்துவிடுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.