அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்றும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் சிறு விளக்காக இருக்கவே விரும்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
திமுக, அதிமுக இரு கட்சிகளும், ஒன்றின்மீது மற்றொன்று ஊழல் குற்றச்சாட்டு கூறி வருவதை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன், இரு தரப்பிலுமே தாங்கள் ஊழல் செய்யவில்லை என்று கூறவில்லை என்று குறிப்பிட்டார். இந்த ஊழலுக்கு முடிவு கட்ட மக்கள், மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.







