முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சீரமைக்கப்படும்: சைதை துரைசாமி!

சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சீரமைக்கப்படும் என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு, அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சைதாப்பேட்டை பகுதியை வளர்ச்சிடையச் செய்வதற்காக தான் எடுத்த நடவடிக்கைகள் ஏராளம் எனக் கூறினார். மேலும், சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது நவீன இயந்திரங்கள் மூலம் நீர் நிலைகளை சீரமைத்ததுபோல, சைதாப்பேட்டை தொகுதியும் நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் – போராடி மீட்பு

EZHILARASAN D

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

Halley Karthik

205 நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் திருவிழா நிறைவு

Gayathri Venkatesan