“மகாகவி பாரதியாரின் புகழ் வாழ்க” – மாணிக்கம் தாகூர் பதிவு!

மகாகவி பாரதியார் கண்ட சமத்துவமான, சுதந்திரமான இந்தியா மலரட்டும் என்று மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாள்!

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!”

அச்சத்தையும் அடிமைத்தனத்தையும் தகர்த்து, சுதந்திர இந்தியாவின் கனவைத் தனது கவிதைகளால் விதைத்த மகாகவி பாரதியார் அவர்களை இன்று போற்றிப் பணிகிறேன்.

தேச விடுதலை மட்டுமல்லாமல், சாதி வேற்றுமையற்ற சமுதாயம், பெண்கள் சமத்துவம், கல்வி, சமூக நீதி மற்றும் மனிதநேயம் கொண்ட புதிய இந்தியாவை அவர் கனவு கண்டார்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்”

என்று தமிழின் பெருமையை உலகறியச் செய்த பாரதி, அதே நேரத்தில் இந்திய ஒற்றுமையையும் வலியுறுத்திய மகத்தான தேசியக் கவிஞர்.

அவர் ஏற்றிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சிந்தனையின் தீபம் என்றும் அணையாது.

மகாகவி பாரதியாரின் புகழ் வாழ்க!
அவர் கண்ட சமத்துவமான, சுதந்திரமான இந்தியா மலரட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.