விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது. பின் சண்டைக் காட்சிகளுடன் கூடிய படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மூன்றாம் கட்டமாக நடந்து வந்துவந்தது.
தற்போது படப்பிடிப்பு முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ளார். இதனால் படத்தின் இதர காட்சிகள், டப்பிங் பணிகளை விரைந்து முடித்து விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கான ப்ரீப்ரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக லோகேஷ் இறங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பே படத்தின் டைடில் மற்றும் படத்தின் ப்ர்ஸ்ட் லுக் படக்குழுவால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 







