முக்கியச் செய்திகள் இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்காலத் தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு சற்று தாமதமாக கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாடாளுமன்றத்தில் இந்தியா-சீனா எல்லை மோதல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இதனால் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. டிசம்பர் 29ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது. மேலும், நடப்பு கூட்டத்தொடரில் 97 சதவிகிதம் மக்களவை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டீ விற்பனையில் புதிய யுக்தி; மாதந்தோறும் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!

Jayapriya

ஆளுநரின் தேநீர் விருந்து; சிபிஎம், விசிக, மமக புறக்கணிப்பு

EZHILARASAN D

தேங்காப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்யக்கோரி மீனவர்கள் போராட்டம்

Web Editor