அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிர் வாட்டி வருவதால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் இன்று ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாள் மட்டும் 2,270 விமானங்கள் ரத்தாகியுள்ளன.
தொடர்ந்து அதிகளவில் பனி பொழிந்து வருவதால், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன. விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பேருந்தின் மூலம் மட்டுமே நீண்ட நேரம் பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.







