ஏப்ரல் 16ஆம் தேதி மக்களைவை தேர்தல் என சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘ஏப்ரல் 16-ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும். எனவே, தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து இந்த அறிக்கையை வைத்து, ஏப்ரல் 16ஆம் தேதி மக்களைவை தேர்தல் என சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் பரவின. ஏப்ரல் 16ஆம் தேதி மக்களைவை தேர்தல் என தகவல் பரவி வரும் நிலையில் இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது உத்தேச தேதி என்றும் உத்தேச தேதியை நிர்ணயம் செய்வது வழக்கமான நடைமுறை என்றும் தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
https://twitter.com/CeodelhiOffice/status/1749784602514977166







