உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவுப் போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி வென்றார்.
ஸ்பெயினின் வெல்வா நகரில் 26 வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரரான லக்ஷயா சென்னுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த், பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்-னை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்மூலம்,உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதையடுத்து நேற்று நடந்த இறுதிப் போட்டியில், தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ-வும் மோதினர். இதில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்ந்தை வீழ்த்தி பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் தோற்றதால் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.