பிலிப்பைன்ஸில், ’ராய்’ தாண்டவம் : பலியானோர் எண்ணிக்கை 169 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸில், ’ராய்’ புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸின் ராய் என்கிற சக்தி வாய்ந்த புயல் இரண்டு நாட்களுக்கு முன் தாக்கியது. இதில் அந்த நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு…

பிலிப்பைன்ஸில், ’ராய்’ புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் ராய் என்கிற சக்தி வாய்ந்த புயல் இரண்டு நாட்களுக்கு முன் தாக்கியது. இதில் அந்த நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்கள் பலத்த சேதம் அடைந்தன. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசியதால், நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் பல காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் மூழ்கின.

புயலைத் தொடர்ந்து மழையில் தொடர்ந்து கொட்டித் தீர்த்தது. இதனால், ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் காரணமாக 3000-க்கும் மேற்பட்ட நகரங்களில் மின்வினியோகம் தடைபட்டுள்ளது. இந்த புயல் காரணமாக, போஹோல், விசயாஸ் உட்பட பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

1,80,800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கரகா, தெற்கு மிண்டானோவ், ஜம்போவங்கா பகுதிகளில் இன்னும் 50 பேரை காணவில்லை.

இந்நிலையில் இந்த புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 169 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பிலிப் பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்த்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.