கேரளா இடுக்கி மலைக்கிராமங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களை அழித்து வருகின்றது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள கொன்னத்தடி பஞ்சாயத்திற்குட்டபட்ட மலைக்கிராமமான செண்பகப்பாறை, சின்னார், பேரிஞ்சர்குட்டி, சேனாபதி ஆகிய கிராமத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்து விவசாய பயிர்களையும், வாழைகளையும் சேதப்படுத்தி வருகிறது.
மண் புழுக்கள் விவசாயிகளின் நண்பன் என்றால், இந்த வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் விரோதியாக கருதப்படுகிறது. உள்நாட்டுப் போரால் வறுமையில் வாடும், கென்யா, சோமாலியா, உகாண்டா, தென் சூடான், ஏமன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளை டிசம்பா் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வெட்டுக்கிளிகள் விரைவிலேயே இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்துமென ஐ.நா.வின் உணவு – பாதுகாப்பு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்திருந்தது.
இவ்வாறு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பின் விளைவால் கேரள விவசாயிகள் என்ன செய்வது என அறியாமல் தவித்து வருகின்றனர்.







