ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை!

ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சாலைகளை புதுப்பிக்க…

ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சாலைகளை புதுப்பிக்க ஒப்பந்தப்புள்ளிகளை தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை ஒப்பந்தப்புள்ளி கோரியது.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், சாலைகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள விரும்புவோர் வரும் 28 தேதி முதல் ஜூலை 14-ம் தேதிக்குள் http://www.pmgsytenderstn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14-ம் தேதி மாலை 4 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு, ஒப்பந்தம் ஒதுக்கப்படும் எனவும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.