விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தகுதியுள்ள விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கு கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு விவசாய கடன் தர மறுக்கும் என்.மங்கலம் தொடக்க வேளாண்மை…

தகுதியுள்ள விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கு கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு விவசாய கடன் தர மறுக்கும் என்.மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் கார்த்திக் மற்றும் செயலாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரி வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா என்.மங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்ற விவசாயிக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கி கடன் வழங்க மறுத்துள்ளது. இதனை எதிர்த்து அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் கடன் விண்ணப்பத்தை ஏற்று 4 வாரங்களில் அவருக்கு விவசாய கடனை வழங்க வேண்டும் என கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.