சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்

லோடு மேன்கள் ரேசன் பொருட்களை  ஏற்ற மறுப்பதால் , சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 850க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் செயல்பட்டுவருகிறது. இந்த ரேசன்…

லோடு மேன்கள் ரேசன் பொருட்களை  ஏற்ற மறுப்பதால் , சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 850க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள்
செயல்பட்டுவருகிறது. இந்த ரேசன் கடைகளுக்கான பொருட்கள் 7 தாலுகாக்களில்
நுகர்பொருள் வானிப கழகத்தின் மூலம் செயல்பட்டுவரும் கிடங்குகளில் இருந்து
தினசரி பொருட்களை ரேசன் கடைகளுக்கு கொண்டு செல்ல பாம்கோ நிறுவனத்தின் மூலம்
ஒப்பந்த அடிப்படையில் லாரிகள் அமர்த்தப்பட்டு அதன் மூலமே பொருட்கள் நகர்வுகள்
நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு தாலுகாவில் இருந்தும் தினசரி 150 முதல் 200 ரேசன் கடைகளுக்கு 3 முதல் 5 லாரிகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பொருட்களை கொண்டு செல்லும் நிலையில் இந்த பொருட்களை ஏற்ற லோடுமேன்கள் அந்தந்த கிடங்குகளில் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு கூலி நுகர்பொருள் வானிப கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் லோடுமேன்கள் லாரி உரிமையாளர்களிடம் டன் அளவிற்கு கணக்கிட்டு தனியாக மாமூல் வசூல் செய்வது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்சமயம் டன் ஒன்றிற்கு ரூ450 விதம் இரண்டு மடங்கு பணம் மாமூல்
கேட்டு லோடுமேன்கள் பொருட்களை லாரியில் ஏற்ற மறுத்து வருவதால் அனைத்து குடோன் வாயிலில்களிலும் லாரிகள் கடந்த 4 நாட்களாக காத்துக்கிடக்கின்றனர். குறிப்பாக
சிவகங்கை நுகர்பொருள் வானிப கழக கிடங்கில் இரண்டு தாலுகாவிற்குட்பட்டு
இயக்கப்படும் 5 லாரிகள் காத்துக்கிடக்கின்றன.  இதனால் லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதுடன் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து லாரி உரிமையாளர்களும் இனைந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தின் புகார் மனு அளித்தும் அரசு தரப்பில் எந்த ஒரு
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே விரைவாக அரசு
தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.