இரட்டை கொலை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இரு பெண்களை கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனையும் நாற்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள விளானூர் கிராமத்தைச்…

இரு பெண்களை கொலை செய்த நபருக்கு மூன்று ஆயுள் தண்டனையும் நாற்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள விளானூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காளிமுத்து, சிவக்குமார், மணிப்பூரைச் சேர்ந்த லல்லன் பாய் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 2018-ல் ஏற்கனவே ஒரு பெண்ணை கொலை செய்ததை காளிமுத்து ஒப்புக்கொண்டார். இரு கொலை வழக்குகளும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, இரு கொலைகளில் தொடர்புடைய காளிமுத்துவிற்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் கூடிய மூன்று ஆயுள் தண்டனையும் 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.


இரண்டாவது குற்றவாளியான சிவகுமாருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் கூடிய இரட்டை ஆயுள் தண்டனையும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய லல்லன் பாய்க்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.