முக்கியச் செய்திகள் தமிழகம்

பல்லியை பார்சல் செய்துக்கொடுத்த உணவகம்.. கடுப்பான வாடிக்கையாளர்

கோவை சித்தாபுதூர் அருகே தனியார் ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் ‘இட்லி விருந்து’ என்ற பெயரில் தனியார்ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு நேற்றிரவு தனது நண்பர்களுடன் வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் இட்லி, சாம்பார் பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்று பார்சலை பிரித்துச் சாப்பிட்டப்போது சாம்பாரில் உயிரிழந்த நிலையில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக பல்லி இருந்த இருந்த பார்சலை எடுத்துச்சென்ற ஏழுமலை, ஹோட்டல் ஊழியர்களிடம் முறையிட்டிருக்கிறார். அதற்கு, ஹோட்டல் உரிமையாளர் தற்போது கடையில் இல்லை என அங்கு வேலை பார்ப்பவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும், மீண்டும் காலை வந்து பார்க்குமாறு மெத்தனமாகப் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, உணவு பார்சலில் பல்லி இருப்பதைத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த காட்சிகள் வைரலாகி, ஹோட்டலின் மீது கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், வீடியோ பதிவை ஆதாரமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக ஏழுமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராகப் பார்க்கிறேன்-ஆளுநர் தமிழிசை புகழாரம்

G SaravanaKumar

தமிழ்நாடு விவசாயிகள் கனவை நிறைவேற்றிய மத்திய பட்ஜெட்: எல்.முருகன்

EZHILARASAN D

உலக வில்வித்தை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை!

Vandhana