முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு – முதலமைச்சர் வேதனை

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் 18, 19-ம் தேதியன்று, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இதனையடுத்து, சிறைபிடித்துச் சென்ற மீனவர்களை நிற்க வைத்து அவர்கள் மீது இலங்கை அரசு கிருமி நாசினியைப் பீய்ச்சி அடித்தது. இந்த சம்பவம் ஒரு மனித உரிமை மீறல் என கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனை கண்டித்து தமிழ்நாட்டு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பொங்கலுக்கு முன் 43 மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என இலங்கை அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது அந்த மீனவர்களின் சிறைக் காலம் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு வலியுறுத்தியுள்ளார்.
Advertisement:
SHARE

Related posts

மே 1 -முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

எல்.ரேணுகாதேவி

தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கார் விபத்து; தந்தை மற்றும் மகள் உயிரிழப்பு

Halley Karthik

ஊரடங்கு தளர்வுகள்: சலூன், பூங்கா, பள்ளி, கல்லூரி நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி!

Gayathri Venkatesan