44வது செஸ் ஒலிம்பியாட்டைக் கொண்டாடும் விதமாக சென்னையில் கடலுக்கு அடியில் நீச்சல் பயிற்சி வீரர்கள் செஸ் விளையாடி மகிழ்ந்தனர்
சுமார் 100 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் அந்த தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 28ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த போட்டியை தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை கொண்டாடும் விதமாக தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட.ன. சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் முழுவதும் சதுரங்க கட்டடங்கள் போல் ஆக்கப்பட்டு ஜொலிக்கிறது. இந்த கொண்டாட்டங்களின் ஒரு அம்சமாக சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் கடலுக்கு அடியில் செஸ் போட்டி நடைபெற்றது.
ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கும் வீரர்கள், நீலாங்கரை கடலில் 60 அடி ஆழத்திற்கு சென்று சதுரங்க போட்டியில் விளையாடி மகிழ்ந்தனர். இந்த போட்டியின்போது 44வது செஸ் ஒலிம்பியாட்டின் சின்னமான தம்பி போல் உடை அணைந்து அவர்கள் உற்சாகம் அடைந்தனர். கடலுக்கு அடியில் திருமணம், கடலுக்கு அடியில் பிறந்த நாள் கொண்டாட்டம், என நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் வரிசையில் தற்போது கடலுக்கு அடியில் ஒரு சதுரங்க போட்டியே நடைபெற்று முடிந்துள்ளது