செவித்திறன் குறைபாடுள்ள சிறுமி முதல் முறையாக ஒலியைக் கேட்கும் போது, அவரது மகிழ்ச்சி காண்போரை உணர்ச்சி வசப்படுத்துகிறது.
இணையத்தில் சுற்றித் திரியும் பல வீடியோக்கள், மக்கள் தங்கள் திறமைகளை பறைசாற்றுவதையும், நம்மை மகிழ்விப்பதையும், சில வேடிக்கைகளையும், சில மனதைக் கனக்கச் செய்வதையும் காட்டுகின்றன. சமீபத்தில், ஒரு சிறுமியின் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் கண்ணில் படவே அவை இணையத்தில் வைரலாக தொடங்கியது.
இந்த வீடியோவில், காது கேளாத ஒரு சிறுமி முதல் முறையாக ஏதோ கேட்கிறார். அதற்கு அவளுடைய எதிர்வினை விலைமதிப்பற்றதாக இருக்கிறது. வீடியோவில், சிறுமி முதல்முறையாக ஒலியை கேட்கும்போது நடனமாடி கொண்டாடுவது பார்போரை நெகிழ்ச்சியடைய செய்கிறது.
https://twitter.com/cctv_idiots/status/1644766387766808581?s=20
இந்த கிளிப் மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில், “முதல் முறையாக உங்களைக் கேட்கிறேன்” என்ற தலைப்புடன் பதிவேற்றப்பட்டது. மக்கள் இந்த வீடியோவின் கருத்துப் பிரிவில் இனிமையான மற்றும் இதயப்பூர்வமான கமெண்டுகளை நிரப்பியுள்ளனர்.







