ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ருத்ரன் திரைப்படத்தை திரையிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன்படத்தின் மூலம் ஃபைவ்…

ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ருத்ரன் திரைப்படத்தை திரையிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ருத்ரன் திரைப்படத்தை திரையிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50  லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.