ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : ஏலம் விட வேண்டிய சொத்துப் பட்டியல் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்!

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பட்டியலை சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா்ஒப்படைத்தனர். இது தொடர்பான வழக்கு பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி எச்.ஏ.மோகன்…

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பட்டியலை சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா்ஒப்படைத்தனர்.

இது தொடர்பான வழக்கு பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி எச்.ஏ.மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபடி, ஏலம் விடவேண்டிய பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் முழுப் பட்டியலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சாாபில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவுளி தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி வங்கிக்கணக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான விவரம், பறிமுதல் செய்யப்ட்ட தங்கம், வெள்ளி பட்டியல் மற்றும் 6 பினாமி நிறுவனங்களில் சொத்துப்பட்டியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

பினாமி நிறுவனங்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கை குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் விவரித்தார். இதைத் தொடாந்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.