மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களது ஊருக்கு செல்ல, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உதவிய சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.
மதுரையில் நிகழ்ந்த ரயில் பெட்டி தீ விபத்து குறித்து அறிந்த, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், தாமதம் இன்றி அவற்றை உத்தர பிரதேசத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், அரசு மருத்துவமனை டீன் ஆகியோருக்கு வழங்கிய அமைச்சர்,, மதுரை விமானம் நிலையத்திற்கு வந்து அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவர், கண்கலங்கியது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஊர் திரும்புவதற்கு தேவையான உதவிகளை வழங்கிய அமைச்சரின் மனிதாபிமான செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.







