இந்திய நடிகர்களில் மிகவும் பிரபலமான பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். நடிகை ஆல்யாபட் இரண்டாவது இடத்திலும், ஐஸ்வர்யா ராய் 3வது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச அளவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஓடிடி படைப்புகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேகரித்து வழக்கும் ஆன்லைன் தரவு தளமாக செயல்படுகிறது ஐஎம்டிபி. இதன் சார்பில், மிகவும் பிரபலமான நட்சத்திரங்களை பட்டியல் ஆண்டு இறுதியில் வெளியாவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி 2022ம் ஆண்டின் டாப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் தனுஷ். தனுஷை தொடர்ந்து 2-ம் இடத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் வருகிறார். இந்த வருடத்தின் பிரம்மாஸ்திரா-1, ஆர்ஆர்ஆர், கங்குபாய் உள்ளிட்ட படங்கள் அலியாபட்டுக்கு கைகொடுத்திருக்கிறது. மூன்றாம் இடத்தில் பொன்னியின் செல்வன் -1 படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் இடம்பிடித்திருக்கிறார்.
டோலிவுட்டின் ராம்சரண் தேஜா 4-ம் இடத்தையும் வகிக்கிறார். 5-ம் இடத்தில் யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கும் சமந்தா பிடித்திருக்கிறார். அதற்கடுத்த இடங்களை பாலிவுட் நட்சத்திரங்களான ஹிர்த்திக் ரோஷன், கியரா அத்வானி, டோலிவுட் நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் பிடித்துள்ளனர். பத்தாவது இடத்தில் கேஜிஎஃப்-2 படத்தில் நடித்த நடிகர் யாஷ் வருகிறார்.
தமிழகத்தின் மற்ற உச்ச நட்சத்திர நடிகர்களை விட தனுஷ் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.