”பாபா” படம் மறுவெளியீடு எப்போது?- வெளியானது அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த ”பாபா” படம் எப்போது மறுவெளியீடு செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் கதை, திரைகதை எழுதி அவரே தயாரித்த படம் பாபா.  பாட்ஷா, அண்ணாமலை, வீரா போன்ற வெற்றி படங்களை கொடுத்த…

ரஜினிகாந்த் நடித்த ”பாபா” படம் எப்போது மறுவெளியீடு செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் கதை, திரைகதை எழுதி அவரே தயாரித்த படம் பாபா.  பாட்ஷா, அண்ணாமலை, வீரா போன்ற வெற்றி படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா பாபா திரைப்படத்தையும் இயக்கினார். ஏர்.ஆர்.ரகுமான் இசையமைத்த பாபா திரைப்படம்  கடந்த 2002 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் மணிஷா கொய்ராலா, எம்.என்.நம்பியார், கவுண்டமணி, விஜயகுமார், சுஜாதா, டெல்லி கணேஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படையப்பா படத்திற்கு பின் 3 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளிவந்த பாபா திரைப்படம் அப்போது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்டு, மறு எடிட்டிங் செய்யப்பட்டு பாபா பட்ம மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூபில் பெற்றது.

ரஜினிகாந்தின் பிறந்த நாளான வரும் டிசம்பர் 12 ல்  பாபா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக டிசம்பர் 10 தேதியே திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.