சிம்பன்சியுடன் கொஞ்சி விளையாடும் சிங்கக் குட்டிகள் – வைரல் வீடியோ

பெண் சிம்பான்சி , இரண்டு சிங்க குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பலரது உள்ளங்களையும் கவர்ந்து வருகிறது. பொதுவாகவே இணையத்தில் விலங்குகள் குறித்த விடியோக்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்…

பெண் சிம்பான்சி , இரண்டு சிங்க குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பலரது உள்ளங்களையும் கவர்ந்து வருகிறது.

பொதுவாகவே இணையத்தில் விலங்குகள் குறித்த விடியோக்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக, குட்டி விலங்குகள் தன் தாயுடனோ அல்லது பிற விலங்குகளுடனோ விளையாடி சேஷ்ட்டைகள் செய்யும் வீடியோக்கள் வைரல் ஆவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிம்பான்சி ஒன்று இரண்டு சிங்க குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிக நபர்களால் விரும்பப்பட்டு வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

அந்த வீடியோவில், பெண் சிம்பன்சி ஒன்று தனது இடத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது. அப்போது ஒரு சிங்கக் குட்டி அதன் அருகே வந்து அதனை கொஞ்சியவாறு விளையாட தொடங்குகிறது. சிம்பன்சியும் அதன் மீது அன்பைப் பொழிகிறது, இருவரும் விளையாடுவதைப் பார்த்து, மற்றொரு சிங்கக் குட்டியும் சிம்பன்சி அருகில் வந்து கொஞ்ச துவங்க, மூவரும் விளையாடத் தொடங்குகிறார்கள்.

இந்த வீடியோவானது அளவிலும் சரி , பார்ப்பதிலும் சரி சிறியதாக தோன்றினாலும், இவ்வுலகில் அன்பு என்கின்ற உன்னதமான விஷயம் இனங்களை கடந்து விலங்குகள் இடத்திலும் கொட்டி கிடப்பதை பார்க்கும் போது புதுவித உணர்வை கொடுப்பதினால், பலரும் இந்த வீடியோவை பகிர்ந்த வருகின்றனர். அந்த வகையில், Instagram இல் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 38 லட்சத்திற்க்கும் அதிகமான பார்வையாளர்களையும், 1 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்து, தற்போதும் பலர் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.