கடலூர் வெள்ளி கடற்கரையில் தூய்மைப் பணி!

எனது குப்பை – எனது பொறுப்பு என்ற தூய்மை பணியை தொடர்ந்து,  கடலூர் மாநகராட்சி மேயர் தலைமையில் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் தலைமையில் எனது குப்பை, எனது பொறுப்பு…

எனது குப்பை – எனது பொறுப்பு என்ற தூய்மை பணியை தொடர்ந்து,  கடலூர் மாநகராட்சி மேயர் தலைமையில் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் தலைமையில் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற திட்டம் தொடங்கப்பட்டது.  இதன் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் 2-வது
மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும் என
முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.

அதன் பேரில் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கடலூர் வெள்ளி கடற்கரை மற்றும் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தூய்மை பணி நடை பெற்றது. மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடந்த நிகழ்வில், துணை மேயர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சுந்தரி கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.

அதையடுத்து, தூய்மை பணிக்கான எனது குப்பை- எனது பொறுப்பு என்ற உறுதி மொழி ஏற்று, மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்கள் வெள்ளி கடற்கரை மற்றும் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர். இதில் மண்டல குழு தலைவர், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

—ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.