காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளது தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளது தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட தேரைக்குளம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட
குடும்பங்களில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகிப்பதில் தடை ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் எடுத்து கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு முறையான குடிநீர் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது,ஊராட்சி மன்ற தலைவர் மரிய பிரமிளா பிரைட்டன் ஆகியோர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
வேந்தன்
08.04.23 VALLIOOR SALAI MARIYAL NEWS VISUALS

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.