எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென தன்னுயிர் தந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாள் இன்று.
தனது கோரிக்கையில் உறுதியுடன் நின்று 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து போராட்டக்களத்திலேயே மறைந்தவர்.
அவரது போராட்டத்துக்கும் – தியாகத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவிசாய்க்காத நிலையில்,
முதல்முறையாக கழக ஆட்சி அமைந்த போது, பேரறிஞர் அண்ணா அவர்கள், தாய் நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி சங்கரலிங்கனாரின் தியாகத்தைப் போற்றினார்.
தமிழ்நாடு போல் சங்கரலிங்கனாரின் புகழும் – தியாகமும் என்றும் நிலைத்திருக்கும்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




