முக்கியச் செய்திகள் சினிமா Instagram News

லியோ படத்தை போன்று ஏகே 62 படத்திற்கும் ஆங்கில டைட்டில் – மீண்டும் திரையில் மோத வாய்ப்பு?

லியோ படத்தை போன்று ஏகே 62 படத்திற்கும் ஆங்கில டைட்டில்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பு தலைப்புடன் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் அஜித். அதிக ரசிகர்களை கொண்டுள்ள இவர் அண்மையில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படதில் நடித்திருந்தார். இப்படம் ஜன.11-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதயடுத்து, லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் சில பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ‘ஏகே 62’ பற்றிய தகவலை நீக்கினார். இதனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க விலை என்பது உறுதியானது.

அஜித் 62-வது படத்தின் ஒடிடி உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்; ரசிகர்கள் உற்சாகம் | News7 Tamil

இதன்பிறகு கலகத்தலைவன்’ படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் அஜித் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியது . பின்னர் ‘ஏகே 62’ படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியானதை அடுத்து, படத்திற்கான பூஜைகளும் நடந்து முடிந்துளளது. பட பூஜையில் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், படக்குழுவினர் என அனைவரும் கலந்துகொண்ட நிலையில் அஜித் மட்டும் கலந்துகொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர்கள் அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோருடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல் இப்படத்திற்கு முதலில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அனிருத் ஏகே 62 படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

ஏகே 62 படத்தின் அறிவிப்பு விஜய்யின் லியோ படத்தை போன்று டைட்டிலோடு தான் வெளியாகும் என கூறப்படுகிறது. அத்துடன் லியோ படத்தை போன்று ஏகே 62 படத்திற்கும் 3 ஆங்கில டைட்டில்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஏதாவது ஒன்று முடிவு செய்யப்பட்டு,  அறிவிப்பு தலைப்புடன் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தலைக்கவசம் அணிந்திருந்தும் சொமாட்டோ ஊழியர் விபத்தில் உயிரிழப்பு

EZHILARASAN D

வெளி மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய நபர் கைது!

Jeba Arul Robinson

இலங்கை திரும்புகிறாரா கோத்தபய ராஜபக்சே?

G SaravanaKumar