முக்கியச் செய்திகள்

அரசு மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவமனைகளுக்கும் ஒரு வாரத்திற்குள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 10 ஆவது நபராக வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல்வகுமார் என்பவரைச் சந்தித்து நலம் விசாரித்த பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், 2008 செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கிவைத்தார். உறுப்பு மாற்று சிகிச்சை குறித்த பல்வேறு முயற்சிகளுக்கு ஆணையத்தை உருவாக்கினர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த ஆணையம் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பால் நடத்தப்பட்டது, தொடர்ந்து நடத்தப்பட்டும் வருகிறது.

கடந்த மாதம் ஜூலை 31ஆம் தேதி அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் உடன் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கல்லூரி முதல்வர்கள் வைத்த கோரிக்கை என்னவென்றால் 36 அரசு மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் உள்ளது. அதில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே உறுப்புகளைக் கொடையாக பெறும் பதிவு உரிமை உள்ளது. மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பதிவு உரிமை உள்ளது. அது அனைத்து கல்லூரிகளுக்கும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று அந்த உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக அவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். டி எம் எஸ் அதற்கான உரிமத்தை வழங்குகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் பதிவு உரிமை கொண்ட மருத்துவமனைகளாக அனைத்து அரசு மருத்துவமனைகளும் மாற இருக்கிறது.

2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு 1,548 பேர் தமிழகத்தில் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். அதன் மூலம் 5,642 பேர் பயன் பெற்றுள்ளனர். 722 பேருக்கு இதயம், 686 பேருக்கு நுரையீரல், 1,424 பேருக்கு கல்லீரல், 2,766 சிறுநீரகம், 34 பேருக்கு கணையம், கைகள் 4 பேருக்கு, 2,302 பேருக்கு கண் விழி, வயிற்று மடல் 3 பேருக்கு என பலர் உயிர்பெறவும் உதவி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் 10வது நபராக ஓமந்தூரார் மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பயன் பெற்றுள்ளார். இவருடன் சேர்ந்து இதுவரை 10 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதற்கு காரணமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் விமலா, துறைத் தலைவர் மனோகர், மருத்துவர்கள் பார்த்தசாரதி, சரவண கிருஷ்ணராஜ், அபினாயவள்ளவவன், எழிலன், மீனா, கலைவாணி, செவிலியர்கள் சுதா உள்ளிட்டோருக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்தார்.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருதயம், கல்லீரல் போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு என 15 லட்சம் தொடங்கி 22 லட்சம் வரை காப்பீடு திட்டம் மூலம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகள் 12,233 பேர். அதற்கான செலவினம் 985 கோடியே 5 லட்சம்.

இன்னும் தமிழக அரசு மருத்துவமனைகளில் 2,645 பேர் சிறுநீரகம் , 22 பேர் கல்லீரல், 5 பேர் இதயம், இதயம் மற்றும் நுரையீரல் சேர்த்து 2 பேர், 17 பேர் கைகள் வேண்டியும் காத்திருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் 3,747 சிறுநீரகம், 39 பேர் இதயம், 321 பேர் கல்லீரல், இதயம் மற்றும் நுரையீரல் 17 பேர், கைகள் 6 பேர், கணையத்திற்கு 2 பேர் , 48 பேர் நுரையீரல் என்ற பலர் உறுப்புகளுக்கு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். வாழ்வின் விளிம்பில் இருக்கும் அவர்களுக்கு, உறுப்புகளை வழங்க முன் வர வேண்டும். மூளைச் சாவு அடைபவர்கள் உங்கள் உறவினராக இருந்தால் அவரின் உடல் உறுப்புகளை தானம் அளியுங்கள். உயிர் போகப் போகிறது என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு உதவுங்கள் உங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். மண்ணில் புதைப்பதற்கு பதிலாக, எரிப்பதற்கு பதிலாக உறுப்பு தானம் செய்யுங்கள்.

உறுப்பு தானம் செய்பவர்கள் அரசு சார்பில் கௌரவிக்கப்படுவார்கள். வேறு பயன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து உதவுவது மனித நேயம் ஆகாது. 21 மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடிய தேவைகளை ஏற்படுத்தி தர முயற்சி நடக்கிறது. ஜனவரி முதல் 68 பேர் உறுப்பு தானம் செய்தது மூலம் 558 பேருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டு பயன் பெற்றுள்ளனர்.
உறுப்புகளை தானம் பெறுவதற்கான உரிமத்தை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் கிடைத்துவிடும்.

558 பேர் உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் 5 மாதங்களில் பயன் பெற்றுள்ளனர். இந்த ஒரு மாதத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மட்டும் 3 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. பாரதிராஜா உடல் நிலை நன்றாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் முகச்சிதை ஏற்பட்ட குழந்தைக்கு நல்ல மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைகளில் சேர்க்க வழங்கப்படும் 5000 ரூபாய் ஊக்கத்தொகைக்காக மட்டும் மக்கள் அவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதில்லை. போலீஸ் விசாரணை என்று அலைய வேண்டியதில்லை என்று புரிந்து கொண்டார்கள்.

“இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 மணி நேர திட்டம்” 673 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது . 1 லட்சத்து 9 ஆயிரம் 143 பேர் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். 97 கோடியே 64 லட்சத்து 2 ஆயிரத்து 850 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 228 அரசு மற்றும் 445 தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 673 மருத்துவமனைகளில் இந்த இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகம் விபத்து ஏற்படும் இடங்கள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் 500 இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1லட்சத்து 9 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திறன் இந்தியா திட்டம் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி: பிரதமர் மோடி

Gayathri Venkatesan

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியன்ஸ் ரியாக்‌ஷன்ஸ்!

EZHILARASAN D

நாமக்கல்: கட்டுமான பணிகள் முடிவதற்குள் தண்ணீர் தொட்டி திறப்பு – இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

EZHILARASAN D