3 இயக்குனர்கள் உழைப்பில் உருவாகும் விஜயின் 67வது படத்தின் கதை

ப்ரீப்ரொடக்ஷன் பணிகளை முடித்த பின்  இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு…

ப்ரீப்ரொடக்ஷன் பணிகளை முடித்த பின்  இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது.
இந்நிலையில் விஜயின் 67வது படம் தொடர்பான மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கென இருக்கும் பெறும் ரசிகர் கூட்டம் அவர் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறது. அப்படி இருக்க விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும்,  எப்போதும் லோகேஷ் கனகராஜ் படங்களில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து அவருடன் கதைக்கு உருவாக்கத்திற்கு உதவும் இயக்குனர் ரத்தினகுமாருடன் தற்போது மற்றோறு இயக்குனர் இணைந்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு சித்தார்த் நடிப்பில் வெளியான ஜில் ஜங் ஜக் என்ற படத்தை இயக்கியவர் தீரஜ் வைத்தி. இவர் தான் தற்போது விஜய் 67 படத்தின் கதை விவாதத்தில் இணைந்துள்ளார்.  ஜில் ஜங் ஜக் படத்தில் காமெடி காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்ததால், விஜய் 67 படத்தில் இடம்பெறவுள்ள காமெடி காட்சிகளுக்கு தீரஜ் உதவியாக இருப்பார் என்பதால் அவரை இந்த படத்தில் இனைத்திருப்பதாக்கக் கூறப்படுகிறது.
மேலும் ப்ரீப்ரொடக்ஷன் பணிகளை முடித்து இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பே படத்தின் டைடில் மற்றும் படத்தின் ப்ர்ஸ்ட் லுக் படக்குழுவால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.