மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி பட்டியல்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்திய பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டு, சந்தையில் ஐந்தாவது மதிப்புமிக்க நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. எல்ஐசி ஐபிஓ வெளியீட்டின்போது இந்நிறுவனம் ரூ.6 லட்சம் கோடி ரூபாய் அளவில் மதிப்பீடு…

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்திய பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டு, சந்தையில் ஐந்தாவது மதிப்புமிக்க நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

எல்ஐசி ஐபிஓ வெளியீட்டின்போது இந்நிறுவனம் ரூ.6 லட்சம் கோடி ரூபாய் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இன்றைய சரிவுக்குப் பின் சந்தை மதிப்பீடு ரூ.42,500 கோடி ரூபாய் சரிந்து அந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.5.57 லட்சம் கோடியாகச் சரிந்தது. முன்னதாக, மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிட்டு அதன் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டது.

இதற்காக ஐபிஓ எனப்படும் ஆரம்பப் பொது பங்களிப்பு தொகைக்கான சந்தா காலம் மே 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை திறக்கப்பட்டது. ஒரு பங்கின் ஐபிஓ விலையானது ரூ.902 முதல் ரூ.949 வரை விற்பனை ஆனது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட ஐபிஓ விலையான ரூ.949 இல் இருந்து 8.62 சதவீதம் தள்ளுபடி விலையான ரூ.867.20க்கு எல்ஐசியின் ஒரு பங்கின் விலை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

பட்டியலிடப்பட்ட எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூ.5.57 லட்சம் கோடியாகும். இதையடுத்து, சந்தை மதிப்பின் படி நாட்டின் ஐந்தாவது பெரிய நிறுவனமாக எல்ஐசி உருவெடுத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை காரணமாக நிச்சயமற்ற சந்தையைக் கொண்டு இருக்கும் நிலையில் எல்ஐசி பங்குகளின் பட்டியலிடப்படும் விலை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.