தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று முன்தினம் ( நவம்பர் 7) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம் சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,160 க்கும், ஒரு சவரன் ரூ.1,05,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.205-க்கும். ஒரு கிலோ ரூ.2.05 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




