மாநிலங்களவை தேர்தல் எவ்வாறு நடைபெறும் ? மற்றும் மாநிலங்களை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
1. மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
2. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் 18 மாநிலங்களை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
3. ஒவ்வொரு உறுப்பினருக்கும் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவடையும்.
4. காலியிடம் உருவாகும் போது அந்த இடத்தை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும்.
5. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க குறைந்தபட்சம் 34 எம்.ஏல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும்.
6. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
7. சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் 4 இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்ற உள்ளன. மீதமுள்ள 2 இடங்கள் அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
8. மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப்பேரவையின் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போட்டியிட விரும்புவோர் அவரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
9. எம்.எல்.ஏக்கள் ஆதரவில்லாத, தகுதியில்லாத வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது நிராகரிக்கப்படும்.
10. வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்ததும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
10. திமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்களை தவிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
11. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் பட்சத்தில் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் உள்ளிட்ட எந்த தேர்தல் நடவடிக்கையும் நடைபெறாது.