மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. – அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான…

தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று, கடந்த டிசம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

இதையடுத்து, டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும் ஜனவரி 2ஆம் தேதி அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

அதன்படி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய கொண்டாட்டங்களை உள்ளடக்கிய அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வரும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.