முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

காஷ்மீரகத்து தேசியக்கொடி கன்னியாகுமரியில் பறக்கட்டும் – அண்ணாமலை

இல்லம் தோறும் தேசியக்கொடி என்று பிரதமர் அறிவித்துள்ள நிலையில், மக்கள் பிரதமரின் அன்பு வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியக்கொடி என்பது நம் உணர்வுகளுக்கு மிஞ்சிய உயிருக்குச் சமமானது. தன் உயிரைத்தந்து கொடியைக் காத்த குமரன் பிறந்த தமிழக இல்லங்களில் தலை நிமிர்ந்து பறக்கட்டும் தேசியக் கொடி, தன்னலமற்ற நம் தேசியத் தலைவர்கள், தங்கள் உயிரை, உடமையை, துறந்து ஈட்டிய சுதந்திரம், இப்போது சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவாக, 75ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் முடித்துவிட்டு, வெற்றிகரமாக 76 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம். இதை ஒட்டி, இந்தியா முழுவதுமே பல நிகழ்ச்சிகளை, நம்முடைய மத்திய அரசு மாநில அரசு செய்து கொண்டிருக்கிறோம். சமீபத்தில், வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் எல்லாம் சுதந்திரம் பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, அதை ஒரு புனிதமான விழாவாக, மகிழ்ச்சி திருவிழாவாக மக்கள் அனைவரும், கொண்டாட வேண்டும் என்று கூறியதை குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், தமிழகத்தின் வாஞ்சிநாதனை குறிப்பிட்டுப் பேசி இருந்தார். அதிலும் தமிழகத்தில் சுதந்திரப் போர் நடைபெற்ற ரயில் நிலையங்களை எல்லாம் கண்டறிந்து, அதற்கு அந்தத் தலைவர்கள் பெயரைச் சூட்டும் பணியை ரயில்வே அமைச்சகம் செய்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, திருப்பூர் குமரன் ரயில் நிலையம், தூத்துக்குடி வாஞ்சிநாதன் ரயில் நிலையம் ஆகியவை நம் சுதந்திரத் தியாகிகள் பெயர்கள் அமையும் பெருமை பெற்றது.

 

வருகின்ற 13,14,15 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது இனி வீட்டுக்கு வீடு தேசியக் கொடி என்று சொல்லும் படி ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக்கொடி என்கின்ற ஒரு விசயத்தை நமக்குச் சொல்லி இருக்கின்றார். ஆகவே நாம் எல்லாருமே வருகின்ற 13-ஆம் தேதி காலையில், சூரியன் உதித்த பிறகு, நம்முடைய தேசியக் கொடியை ஏற்றி, அது 13-ம் தேதி முழுவதும், 14-ம் தேதி முழுவதும், 15-ம் தேதி முழுவதும் பறக்க வேண்டும் என்று நம்மிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

மேலும் நம்முடைய உள்துறை அமைச்சர் முயற்சியால் இருபத்தி நான்கு மணிநேரம் தேசியக்கொடி பறக்கலாம் என்ற உள்துறை அமைச்சக ஆணையை பிறப்பித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான நம்முடைய சென்னை கமலாலயத்தில் கட்சியின் அனைத்து மாவட்ட தலைவர்களும் இங்கேயிருந்து தேசியக் கொடியினை முதல்கட்டமாக அனுப்பி வைக்கின்றோம்.

நம்முடைய தொண்டர்கள் வீடுகளுக்கும், தலைவர்கள் வீடுகளுக்கும் உடனடியாக தேசியக் கொடியைக் கொடுத்து அனைவரும் 13,14,15 ஆகிய 3 நாட்களில் அவரவர் இல்லத்திலேயே தேசியக்கொடியை பறப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 75-வது சுதந்திர தினம் இனி ஒரு முறை வராது என்பதால், இந்த இன்ப மகிழ்ச்சி பெருவிழாவில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து, சரித்திரம் படைக்க வேண்டும், என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்கின்ற ஒரு கொள்கை அடிப்படையில் ஒரு குழுவை பாரதிய ஜனதா கட்சி அமைத்து இருக்கிறது. தமிழகத்தில் நாகராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் இந்தப் பொறுப்பேற்று, இல்லம் தோறும் தேசியக் கொடியை, தமிழகத்திலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற அனைத்து அணிகள் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் காஷ்மீர் மாநிலப் பெண்கள் தயாரித்த தேசியக் கொடியை வழங்கினார்கள்

 

காஷ்மீரத்துக் கொடி கன்னியாகுமரியில் பறக்கட்டும், இதன் மூலம் ”ஒரே நாடு” அதன் உன்னதம் உறுதி செய்யப்படுகிறது. அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நண்பர்கள், சமூக அமைப்புகள், சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்று பொதுமக்கள் அனைவரும் இந்த தேசியக்கொடி ஏற்றுவதன் மூலமாக பிரதமரின் வேண்டுகோளை இங்கே செயல்படுத்த வேண்டும் என்று உங்களிடம் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் என அண்ணமாலை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா; உதவிக்கரம் நீட்டிய சுந்தர் பிச்சை!

EZHILARASAN D

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி

Vandhana

நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை: தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Halley Karthik