முக்கியச் செய்திகள் தமிழகம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; புதிய சிசிடிவி வீடியோ வெளியீடு

பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியை தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கணித அறிவியல் பாடப் பிரிவில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் ஜூலை 13ஆம் தேதி அன்று மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்டதாக பள்ளி தரப்பில் கூறியதன் அடிப்படையில் மாணவியை காலை ஐந்து 15 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் மாணவிகளின் தாயார் செல்வி ஸ்ரீமதி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மாணவி இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியை அதிகாலை 5.23 மணிக்கு மருத்துவமனைக்கு தூக்கி செல்லக்கூடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த காட்சியில் பள்ளியினுடைய செயலாளர் சாந்தி காவலர் மண்ணாங்கட்டி விடுதி காப்பாளர் கிருத்திகா உட்பட நான்கு பேர் மாணவியை துண்டுகட்டாக தூக்கி செல்லக்கூடிய காட்சிகள் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆப்கன் விவகாரம்: பிரதமர் மோடி- புதின் பேச்சுவார்த்தை

Gayathri Venkatesan

பட்டுப்போன மரம் பென்சிலாக மாறியது!

எல்.ரேணுகாதேவி

போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை : மாநகராட்சி ஆணையர்!

EZHILARASAN D