பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் தருவதாக சொன்ன 15 லட்சத்தை
பாஜகவினர் முதலில் தரட்டும் என்று எம்பி கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் புது வாழ்வு பல்நோக்கு மருத்துவமனை
திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜூவன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவமனையைத் திறந்துவைத்தனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழியிடம் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோபாலபுரம் வரை நடைப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கனிமொழி கருணாநிதி முதலில் பாரத பிரதமர் தேர்தல் வாக்குறுதியாக தருவதாக சொன்ன 15 லட்சம் பணத்தை பாஜகவினர் முதலில் தரட்டும் என்றும், அதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் நக்கலாகத் தெரிவித்தார்.
-ம.பவித்ரா








